Comments

3/recent-comments

Tuesday, April 30, 2013

பதில் கடமையினை எவருக்கும் வழங்காது வெளிநாடு சென்ற கல்பிட்டி பி.சபைத் தலைவர் தொடர்பில் முதலமைச்சரிடம் முறைப்பாடு

உரிய ஒழுங்கு விதிகளைப் பின்பற்றாமல் வெளிநாடு சென்று திரும்பிய கல்பிட்டி பிரதேச சபைத் தலைவர் தொடர்பில் வடமேல் மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ் கடந்த புதன் கிழமை பதில் கடமையினை எவருக்கும் வழங்காது, சபைக்கும் தெரிவிக்காது வெளிநாடு சென்று கடந்த சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

 இவ்விடயம் தொடர்பில் ஆளும் கட்சியினை சேர்ந்த 04 உறுப்பினர்கள் ஒப்பமிட்டு முதலமைச்சருக்கு எழுத்து மூலமான முறைப்பாடு ஒன்றினைச் செய்துள்ளதாக அவ்வுறுப்பினர்கள் மேலும் தெரிவித்தனர்.

கற்பிட்டி பிரதேச சபையில் ஆளும் கட்சியினை சேர்ந்த 09 உறுப்பினர்களும்; முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும், ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் மூவரும், சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag