சட்டவிரோதான முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஒருவர் முந்தல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இதற்குப் பயன்படுத்திய வானும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தேர்தல் சட்டதிட்டங்களுக்கு அமைய குறித்த வேட்பாளரின்றி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்த்தை மீறியதற்காகவே இக்கைது இடம்பெற்றுள்ளது.
நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஒருவருக்கு ஆதரவாகவே இந்த பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் சிலாபம் வீதியில் முந்தல் பிரதேசத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட வேனையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நவடிக்கை எடுத்துள்ளதாக முந்தல் பொலிசார் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment