கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டு வெளிநாட்டு தாயரிப்பு என்றும் எனினும் அக்குண்டானது எவ்வகையினைச் சார்ந்தது என கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் வெளியிடங்களில் இருந்து கஞ்சாவைக் கொண்டு வந்து சிலாபம் மற்றும் அண்டிய பிரதேசங்களில் கடந்த காலங்களில் விற்பனை செய்து வந்திருப்பதாகவும், கைக்குண்டு ஒன்றினை எதற்காக சந்தேக நபர் தம்வசம் வைத்திருந்தார் என்ற விடயம் தெரியவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிலாபம் பொலிசார் சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.









0 Comments:
Post a Comment