Comments

3/recent-comments

Monday, April 22, 2013

14 வயது சிறுமியுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்ட இளைஞன் கைது

14 வயது சிறுமி ஒருத்தியுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் 19 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிசார் தெரிவித்தனர்.  மாதம்பை ஜயபிம எனும் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
இளம் வயது சிறுமி ஒருத்தியுடன் இளைஞர் ஒருவர் குடும்பம் நடாத்துவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்தே குறித்த இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவ்வாறு சிறுமியுடன் தான் கணவன் மனைவியாக வாழும் விடயம் சிறுமியின் தாய் மற்றும் பாட்டிக்குத் தெரியும் எனவும்,  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் சிறுமியை அழைத்துக் கொண்டு நொச்சியாகமவுக்கு சென்று அங்கிருந்து தாம் கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாகவும் சந்தேக நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.  மேலும் தாம் தற்போது தனது மனைவியான சிறுமியின் பாட்டியினால் வழங்கப்பட்ட காணி ஒன்றில் தன்னால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டிலேயே வாழ்ந்து வருவதாகவும் சந்தேக நபர் மேலும் தெரிவித்துள்ளார்.

தான் குறித்த சிறுமியுடன் குடும்பம் நடாத்துவது மாதம்பை பிரதேசத்தில் வசிக்கும் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையில் ஒப்பமிடப்பட்ட  ஒப்பந்தம் ஒன்றின் பிரகாரமே என்றும், அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம்  சிறுமியின்  வயது சிறுமிக்குரிய வயதைத் தாண்டும் வரை குழந்தை பெற்றுக் கொள்ளாதிருக்கவும்,  அவ்வாறு உரிய வயது வந்ததன் பின்னர் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதற்கும் தானும், சிறுமியின் தரப்பினரும் இணங்கியதாகவும் சந்தேக நபர் பொலிசாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சந்தேக நபரினால் வழங்கப்பட்ட வாய்மொழி தொடர்பில் பொலிசார் தமது கவனத்தைச் செலுத்தியுள்ளனர்.  அவ்வாறு ஏதாவது ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு இளம் வயது சிறுமியுடன்  குடும்ப வாழ்வில் ஈடுபடுவது சட்டவிரோதமானது எனவும்,  அவ்வாறு ஏதாவது ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டிருப்பின் அதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிவரும் எனவும் மாதம்பை பொலிசார் தெரிவித்தனர்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள மாதம்பை பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag