ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உண்மையான உடல் நலன் தொடர்பில் தனக்கு மிகுந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக படுகொலை செய்யப்பட்ட லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். துமிந்த சில்வாவின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரின் நடவடிக்கைகள் தொடர்பிலேயே தனக்கு சந்தேகம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொலன்னாவ கொட்டிகாவத்தை பிரதேசத்தின் பிரதேச அரசியல்வாதிகள் பலரை நவலோகா வைத்தியசாலைக்கு அழைத்து அவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியிருப்பதாக செய்தி தாள்களில் செய்திகள் வந்திருக்கும் போது அவரது மனநிலையில் இன்னும் நல்ல நிலை ஏற்படவில்லை என அவரது சட்ட ஆலோசகர்கள் தொடர்ச்சியாக கூறி வருவதானது பிரச்சினைக்குரியதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது சட்டத்தரணிகள் சகிதம் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவைப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு விடுத்த வேண்டுகோளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனக் கூறும் ஹிருனிகா, நீதிமன்ற வைத்தியரிடம் அவர் தொடர்பான வைத்திய அறிக்கையினைக் கோரியுள்ளதாகவும், அடுத்த வழக்கு விசாரணை தினத்தில் அவ்வறிக்கை தனக்கு கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார். (lankacnews)

0 Comments:
Post a Comment