ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் மாஹோ பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாஹோ தெதுரு ஓயா திட்ட வான் பகுதியில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
16 மற்றும் 20 வயதுகளையுடைய குறித்த இரு சகோதரிகளும் முதலில் அவர்களின் காதலர்களினால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அவ்விடத்திற்கு வந்துள்ள மேலும் நால்வர் அவ்யுவதிகளை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இரு யுவதிகளும் வைத்திய சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மாஹோ பொலிசார் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment