தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றின் காரணமாக நபரொருவர் மின்சார ட்ரான்ஸ்போமரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாராவில பொலிசார் தெரிவித்தனர். துன்கண்ணாவ மானிங்கள எனும் பிரதேசத்தைச் சேர்ந்த டப்ளிவ். ரஞ்சித் ரெக்சி (வயது 46) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளவராவார்.
நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) குறித்த நபர் தனது மனைவியுடன் பிரச்சினைபட்டுக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். பின்னர் மானிங்கள பிரதேசத்தில் உள்ள மின்சார ட்ரான்ஸ்போமர் ஒன்றில் தூக்கிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது உடலை பிரதேசவாசிகள் கண்டெடுத்துள்ளனர். இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளவர் மானநோய்க்கு உள்ளாகியிருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் தொடர்பில் பிரேத பரிசோதனை இன்று மாராவில வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. மாராவில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments:
Post a Comment