Comments

3/recent-comments

Tuesday, April 16, 2013

சிலாபத்தில் இனிமேல் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்கள் இல்லை

சிலாபம் பிரதேச சபை எல்லைக்குள் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்புக்களை (டியுசன்) நடாத்துவதற்கு தடைவிதிப்பதெற்கான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக சிலாபம் பிரதேச சபையின் தலைவர் ஜீவன் ஜூட் தெரிவித்தார்.  கடந்த பிரதேச சபையின் கூட்டத்தின் போது பிரதேச சபை உறுப்பினர் சுரங்க த சொய்சா (ஆளுங்கட்சி) வினால் கொண்டுவரப்பட்ட
குறித்த பிரேரணைக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏகமானதாக அங்கீகாரம் வழங்கியதையடுத்து இத்தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்களை நடாத்துவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.  விடுமுறை தினமான அன்று குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பமும் இல்லாமல் போகின்றது. சமய நடவடிக்கைகளிலும் ஈடுபட மாணவர்களுக்கு வாய்ப்பு இல்லை.  விகாரைகள் மற்றும் ஏனைய சமய ஸ்தளங்களிலும் ஞாயிறு தினங்களிலேயே சமய வகுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தனியார் வகுப்புக்கள் இடம்பெறுவதனால் இவ்வாறான சமய வகுப்புக்களில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது. இவைகளைக் கருத்திற் கொண்டே இத்தீர்மானத்தை எடுத்ததாக பிரதேச சபைத் தலைவர் ஜூட் மேலும் தெரிவித்தார்.
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag