Comments

3/recent-comments

Monday, April 29, 2013

காதலியின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த இராணுவ வீரர் தானும் தற்கொலை

தனது காதலியின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த இராணுவ வீரர் ஒருவர் தானும் அருகில் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று குருநாகல் பன்னல கந்துலுபொத்த எனும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.  இன்று திங்கட்கிழமை காலை 8.05 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பன்னல பிரதேச சபையில் பட்டதாரி எழுதுவிளைஞராகக் கடமையாற்றும் 25 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டவராவார்.
குறித்த இராணுவ வீரர் கொழும்பு கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது.  இவ்வாறு கொலை செய்யப்பட்ட யுவதியின் பிரேதம் குளியாபிட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (அததெரண)
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag