தனது வெளியூர் நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை புத்தளம், பாவட்டமடு குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே இவர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்த நபர் அப்துல் ஹமீத் (வயது 35) என அடையாளம்
காணப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் இவ்வாறு தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது திடீரெனக் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் காணாமல் போனவரைத் தேடிய போது குறித்த நபர் நீரின் அடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிசார் மேலதிக விசாரனணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments:
Post a Comment