தற்போது கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் அஜிந்
என்பவரின் நண்பர்களான புவனேந்திரன் சுமன் மற்றும் குமாரசிங்கம் நிலக்சன்
ஆகியோரும் தலக்ஷனாவின் படுக்கை அறைவரை சென்றுவந்தனர் என தற்போது
விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.
தாயும் தந்தையும் காலையில் 7மணிக்கு கடைக்கு வந்தால் இரவு 8மணிக்கே
வீட்டுக்கு செல்வார்கள். இவரின் சகோதரியும் பெரும்பாலும் தாயின் பெற்றோரான
ஓய்வு பெற்ற அதிபர் சுந்தரமூர்த்தியின் வீட்டிலேயே அதிகம் இருப்பார். இது
தலக்ஷனாவின் காதல் களியாட்டங்களுக்கு மிக வசதியாக அமைந்து விட்டது.
தன்னுடைய காதலர்களை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருப்பதற்கு இவரின்
குடும்ப சூழ்நிலை மிக இடமளித்துள்ளது.
போதைப்பொருள் பாவனை
14வயதிலிருந்து தலக்ஷனா போதைப்பொருள் பாவிக்க தொடங்கினார் என்றும்
அவரின் காதலர்களே இந்த பழக்கத்தை தனக்கு ஊட்டினார்கள் என்றும் அவர்
காவல்துறையினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே 5பேரை காதலித்த தலக்ஷனா 6ஆவது நபராக தன்னுடன் கல்வி கற்கும்
அஜந் என்பவரை காதலிக்க தொடக்கியதை அறிந்த பெற்றோர் அந்த மாணவனை
கண்டித்துள்ளனர். ஒருநாள் தக்ஷிகாவின் தந்தை ரகு தன் மகளின் காதலனான அஜந்
மீது தாக்குதல் நடத்தியுள்ளார். உனக்கு செய்யிறன் வேலை என கூறிவிட்டு சென்ற
அஜந் தன் காதலியுடன் சேர்ந்து போட்ட திட்டம் தான் இந்த இரட்டை படுகொலை. (jaffna.tv)








0 Comments:
Post a Comment