Comments

3/recent-comments

Sunday, May 12, 2013

கல்பிட்டி தீவில் கேரள கஞ்சா மற்றும் போதைப் பொருள் பக்கட்டுக்களுடன் ஒருவர் கைது

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பிட்டியை அண்மித்த தீவு ஒன்றிலிருந்து கேரள கஞ்சா மற்றும் போதைப் பொருள் பக்கட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை இரவு கல்பிட்டி கடற்படையினரால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 61 கிலோ கேரள கஞ்சா மற்றும் பாரியளவிலான போதைப் பொருட்கள் அடங்கிய பக்கட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் போதைப் பொருள் பக்கட்டுக்களுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கல்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag