இலங்கையைச் சேர்ந்த பணியாளர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக அபுதாபியில் மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ள சிலாபத்தைச் சேர்ந்த குறித்தநபர் ஒருவருக்கு கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு
முன்னர் மன்னிப்பு வழங்காவிடின் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக வெளிநாட்டலுவல்கள்
பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்தார்.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிலாபம் – மெதவல பிரதேசத்தைச் சேர்ந்த காமினி பெரேரா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் மதுஷங்க என்பவரை அபுதாபியில் கொலை செய்துள்ளார். 2009ஆம் ஆண்டு
ஒக்டோபர் மாதமே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
தற்போது அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மே மாதம் 30ஆம்
திகதிக்கு முன்னர் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள காமினி
பெரேராவிற்கு, கொலை செய்யப்பட்ட மதுஷங்கவின் பெற்றோரிடமிருந்து மன்னிப்பு
வழங்கப்படாத பட்சத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
சிலாபத்தினைச் சேர்ந்த உயிரிழந்த பிரதீப் மதுஷங்கவின் பெற்றோரிடம்
அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதுவே சிறந்த
செயலாகும் என்று பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார்.








0 Comments:
Post a Comment