Comments

3/recent-comments

Thursday, May 16, 2013

அவுஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய இலங்கை இளைஞரின் வீசா இரத்து

அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக மாணவி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவரின் வீசா அனுமதியினை இரத்துச் செய்ய அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. டி.செல்வராஜா (வயது 21) என்ற இளைஞருக்கே இவ்வாறு வீசா இரத்துச் செய்யப்பட்டுள்ளது.


குறித்த இளைஞர் கென்கரு தீவில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் வைத்து மாணவி ஒரவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞர் அந்நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.  இந்த வழக்கின் போது குற்றத்தை விசாரணை செய்த அந்நாட்டு உயர் நீதிமன்றம் குறித்த இளைஞரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியது.

குறித்த இளைஞர் அவுஸ்திரேலியாவில் புகழிடம் கோரி தங்கியிருந்துள்ளதுடன் அவருக்கு தற்காலிக வீசா வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (sinhala adaderana.lk)
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag