சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு காத்திருந்தாகக் கூறப்டும் 42 பேரைக் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர். சிலாபம் முன்னேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்த சமயம் இவர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
28 ஆண்கள், 5 பெண்கள் உட்பட 9 சிறுவர்களும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் அடங்குகுவதாகவும், இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் குருநகர் பகுதிகளைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்துக்கு வரவிருந்த ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்றை எதிர்பார்த்தே இவர்கள் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது..
இந்தப் பயணத்திற்காக ஐந்து இலட்சம் ரூபாவிலிருந்து பத்து இலட்சம் ரூபா வரையில் முகவர் அறவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments:
Post a Comment