Comments

3/recent-comments

Friday, May 17, 2013

ஒரு வயது குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!

மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளய்ங்கார எனும் பிரதேசத்தில் தாய் வீட்டிலில்லாத சமயம் கைக்குழந்தையொன்று தீயில் அகப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஒரு வயதும் 3 மாதங்களுமான ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாதம் பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தையின் தாய் குழந்தையை நித்திரையாக்கிய பின் சோறு சமைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு தேவையொன்றிற்காக வெளியே சென்றுள்ளார்.  அச்சமயம் எரிந்து கொண்டிருந்த அடுப்பிலிருந்து தீச்சுவாலை கிடுகினால் வேயப்பட்ட வீட்டின் கூரையில் பட்டு வீடு தீப்பற்றிக் கொண்டுள்ளது.  வறிய குடும்பத்தைச் சேர்ந்த இக்குடும்பத்தில் உயிரிழந்த குழந்தையை சாரியிலான தொட்டில் கட்டியே உறங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாதம்பை பொலிசார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag