கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் பகுதியில்
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குபுக்கல, இஹல புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 06 பிள்ளைகளின் தந்தையான பி.எச்.பி.புஞ்சிலால் (வயது 66) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது மகளின் வீட்டுக்கு பின்புறமாக உள்ள தனது தோப்பில் தென்னங்கன்றுகளை காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக இந்தத் தோப்பில் உள்ள கொட்டிலில் நேற்று வியாழக்கிழமை இரவு வேளையிலிருந்து இவர் காவல் இருந்துள்ளார். இதன்போது அங்கு வந்த காட்டு யானையை துரத்த முற்பட்ட வேளையிலேயே இவரை யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணையை சாலியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments:
Post a Comment