Comments

3/recent-comments

Sunday, May 19, 2013

உள்ளுர் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் இருவர் சிலாபம் பொலிசாரால் கைது!

தங்கொட்டுவ நகரில் நேற்று சனிக்கிழமை சிலாபம் பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத குற்றங்களின் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றின் போது கல்கடாஸ் வகை உள்ளுர் தயாரிப்பிலான  துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் மோட்டார் பைசிகளில் பயணித்த இருவரை கைது செய்துள்ளனர்.


இவர்கள் பயணித்த மோட்டார் பைசிகளும் குளியாபிட்டி பிரதேசத்தில் திருடப்பட்ட ஒன்று என்ற விடயமும் தெரியவந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தங்கொட்டுவ, குளியாபிட்டி, மாராவில, வென்னப்புவ போன்ற பிரதேசங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனவும், இவர்களால் திருடப்பட்ட தங்க நகைகள் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ளமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.  இந்த சந்தேக நபர்களுள் ஒருவருக்கு எதிராக தங்க நகை திருட்டுச்சம்பவங்கள் தொடர்பில் பத்து வழக்குகளும், வீடு உடைப்பு தொடர்பில் நான்கு வழக்குகளும் உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலைய தீர்க்கப்படாத குற்றங்களில் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag