Comments

3/recent-comments

Sunday, May 19, 2013

புகையிரதம் நிறுத்த முன் அதிலிருந்து இறங்க முற்பட்டவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்துள்ள புகையிரதத்தில் பயணித்துள்ள பயணி ஒருவர் புகையிரம்  புகையிரத நிலையத்தில் நிறுத்த முன் அதிலிருந்து இறங்க முற்பட்ட வேளையில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாராவில பொலிசார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நாத்தாண்டி புகையிரத நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இவ்விபத்தில் படுகாயங்களுக்குள்ளான அவரை அங்கிருந்து  உடனடியாக மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சைப் பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த நபர் 45 வயதையுடைய ஒருவர் எனவும் தெரிவித்த மாராவில பொலிசார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag