Comments

3/recent-comments

Tuesday, May 14, 2013

தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு காப்புறுதி நஷ்டயீடு பெற முயன்றவர் கைது

டொரண்டோவில் உள்ள ஒரு நபர், தன்னுடைய காலில் தானே காயப்படுத்திக்கொண்டு, வாகன விபத்தினால் காயம் ஏற்பட்டது என இன்சூரன்ஸ் தொகை பெற முயன்றதாக அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

டொரண்டோவில் உள்ள  Kevin Gilhooley என்ற 43 வயது நபர், தான் வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு தனது காலில் காயம் ஏற்பட்டதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டது.


காவல்துறையினர் விசாரணையில் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை செய்ததில், விபத்து எதுவும் ஏற்படவில்லை என்றும் இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காகவே தான் விபத்து நாடகம் ஆடியதாகவும் ஒப்புக்கொண்டார். இதனால் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. (newjaffna.org)
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag