சிம்பாப்வேயில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது இறந்ததாக நம்பப்பட்ட நபரொருவர் சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த அதிர்ச்சிச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. 34 வயதான பிரைட்டன் டமா சந்தே என்பவரே இவ்வாறு இறுதிச் சடங்கிலிருந்து எழுந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மரணமடைந்துவிட்டார் என நம்பி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் இறுதி ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கையில், டமா சந்தேயின் கால் அசைவதை அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பரொருவர் கண்டுள்ளார்.
ஆனால் தன் கண்ணே தன்னை ஏமாற்றுவதாக நினைத்துள்ளார். ஆனால் இறுதியில் உண்மையை உணர்ந்த நண்பர் அவரைக் காப்பாற்றுவ தற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பின்னர் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதித்து 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் வைத்தியர்கள்.
ஏற்கனவே சிம்பாப்வேயில் இதே போன்று ஒரு சம்பவம் கடந்த ஜனவரி மாதமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. (metronews.lk)

0 Comments:
Post a Comment