விமானத்தில் கூக்குரலில் பாடி பயணிகளை தொந்தரவு செய்த பெண்ணால் இடைநடுவில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயோர்க் நகரை நோக்கி கடந்த 9ஆம் திகதி பயணித்த அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த விமானத்தில் பயணம் செய்த இளம் பாடகி ஒருவர் பிரபலமான ஆங்கிலப் பாடலொன்றை சத்தமாக 2 மணி நேரத்திற்கு அதிகமாக தொடர்ச்சியாக கூக்குரலில் பாடி பயணிகளை தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து பயணிகள், விமானப் பணியாளர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து பணியாளர்கள் அவரின் பாடலை நிறுத்தக் கேட்டுள்ளனர். ஆனால் அப்பெண் பாடலை நிறுத்துவதாக இல்லை. இதனால் விமானம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு கென்ஸாஸ் சிட்டியில் தரையிறக்கப்பட்டுள்ளது. பின்னர் அப்பெண்ணை தரையிறக்கிவிட்டுள்ளனர் விமானப் பணியாளர்கள்.
இறக்கிவிடப்பட்ட பெண் மீது விசாரணைகள் நடப்பட்டபோது எனக்கு நீரிழிவு நோய் உண்டு அதனாலேயே பாடிக்கொண்டு வந்தேன் என பொய்யான காரணங்களை கூறியுள்ளார். ஆனாலும் வழக்குகள் எதுவிமின்றி விசாரணைகளின் அப்பெண்ணை விடுவித்துள்ளனர். இருப்பினும் குறித்த பெண்ணை மீண்டும் விமானத்தில் ஏற்றிச் செல்ல நியூயோர்க் எயார்லைன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. (metronews.lk)

0 Comments:
Post a Comment