Comments

3/recent-comments

Thursday, May 6, 2021

கர்ப்பிணி தாய் ஒருவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பு


தனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்காக காத்திருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி கோவிட் நியுமோனியா நிலையில் உயிரிழந்துள்ளார். ராகமை நாரங்கொடபாலுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தாய் ராகமை வைத்தியசாலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூன்று மாத கர்ப்பிணியான 45 வயதுடைய இத்தாய் சுகயீனமான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார். இதன் போது அத்தாய்க்கு சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும் மீண்டும் சுகயீனமுற்றதால் மீண்டும் ராகமை வைத்தியசாலைக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது அத்தாய்க்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போது அத்தாய் கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அத்தாய் மினுவங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு அங்கு அவளது நிலை மோசமடைந்ததால் மீண்டும் ராகமை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இத்தாய் ராகமை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

Share:

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag