Comments

3/recent-comments
Showing posts with label Home. Show all posts
Showing posts with label Home. Show all posts

Sunday, May 12, 2013

கல்பிட்டி தீவில் கேரள கஞ்சா மற்றும் போதைப் பொருள் பக்கட்டுக்களுடன் ஒருவர் கைது

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பிட்டியை அண்மித்த தீவு ஒன்றிலிருந்து கேரள கஞ்சா மற்றும் போதைப் பொருள் பக்கட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை இரவு கல்பிட்டி கடற்படையினரால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Share:

Thursday, May 9, 2013

புத்தளம் 5ம் வட்டார வடிகால்களை புனரமைப்புச் செய்வது தொடர்பான கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)

புத்தளம் 5 ம் வட்டாரத்தில் (மரிக்கார் கிராம சேவகர் பிரிவு) உள்ள கழிவு நீர் வடிகால்களை புதிதாக அமைப்பது, புனர்நிர்மாணம் செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று புத்தளம் நகர சபை அலுவலகத்தில் இடம்பெற்றது. புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புத்தளம் மாவட்ட மீள் எழுச்சித் திட்டப் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Share:

17 வயது மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த 60 வயது தாத்தா கைது

60 வயதான ஓய்வு பெற்ற கிராம சேவகர் (விதானை) ஒருவர் 17 வயது பாடசாலை மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரம் கலபிந்துனுவௌ பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காதலை வெளிப்படுத்தியதாக கூறப்படும்  அந்த கிராமசேவகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Share:

Sunday, May 5, 2013

கல்பிட்டி பி.ச தலைவருக்கும் உறுப்பினர்களுக்குமிடையில் கட்சி மோதல்

கல்பிட்டி பிரதேச சபைத் தலைவருக்கும், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது.

இதன் விளைவாக ஆளும் கட்சியினை சேர்ந்த 5 உறுப்பினர்கள் கல்பிட்டி பிரதேச சபையின் விசேட சபைக்கூட்டத்தினை கூட்டுமாறு கூட்டாக ஒப்பமிட்டு கடந்த வியாழக்கிழமை பிரதேசசபை செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை கடந்த வியாழக்கிழமை மாதாந்த சபைக்கூட்டம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
Share:

Wednesday, May 1, 2013

உடப்பில் சித்திரைச் செவ்வாய் முளைக்கொட்டு நிகழ்வு ( படங்கள் இணைப்பு)

புத்தளம் உடப்பு கிராமத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சித்திரைச் செவ்வாய் முளைக்கொட்டு நிகழ்வின் போது இடம்பெற்ற சமய நிகழ்வுகளினைப் படங்களில் காணலாம். இந்நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 22ம் திகதி முளைப்பதித்தல் மூலம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 10 தினங்களாக இடம்பெற்று இன்றுடன் நிறைவடைந்தது.
Share:

தன் காதலர்கள் மற்றும் அவர்களது நண்பர்களுடனும் தொடர்பு வைத்திருந்த செங்கலடி தனக்ஷனா!

செங்கலடி கொலையின் சூத்திரதாரசெங்கலடி மத்திய மகாவித்தியா லயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த 16வயதுடைய தலக்ஷனா என்ற இந்த மாண வியின் காதலன் அதேபாடசாலை யில் கல்வி கற்கும் 16வயதுடைய சிவநேசராசா அஜந் என்பது இந்த சம்பவம் பற்றிய செய்திகளின் பின் பலரும் அறிந்த விடயம். ஆனால் அவர் தலக்ஷனாவின் 6வது காதலன். 16வயதுடைய தலக்ஷனா இதுவரை 6பேரை காதலித்துள்ளார் .
Share:

Tuesday, April 30, 2013

கல்பிட்டி கடற்கரையோரத்தில் சடலம் மீட்பு.

கற்பிட்டி, முகத்துவாரம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற கற்பிட்டி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
Share:

பதில் கடமையினை எவருக்கும் வழங்காது வெளிநாடு சென்ற கல்பிட்டி பி.சபைத் தலைவர் தொடர்பில் முதலமைச்சரிடம் முறைப்பாடு

உரிய ஒழுங்கு விதிகளைப் பின்பற்றாமல் வெளிநாடு சென்று திரும்பிய கல்பிட்டி பிரதேச சபைத் தலைவர் தொடர்பில் வடமேல் மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ் கடந்த புதன் கிழமை பதில் கடமையினை எவருக்கும் வழங்காது, சபைக்கும் தெரிவிக்காது வெளிநாடு சென்று கடந்த சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.
Share:

Monday, April 29, 2013

உயிருக்கு அச்சுறுத்தல்! அசாத் சாலி தலைமறைவு?

உயிர் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் தலைமறைவாகியுள்ளதாக முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சேவையின் செய்திப் பிரிவொன்றுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என தமிழ் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிடுள்ளது.
Share:

விபத்தில் பலியான பிரதேச சபைத் தலைவரின் இறுதி ஊர்வளம் (படங்கள் இணைப்பு)

கடந்த வியாழக்கிழமை சிலாபம் தெதுரு ஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த புத்தளம் பிரதேச சபைத் தலைவர் திலுக் சுசிர பத்திரகேயின் இறுதிக்கிரியைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என அதிக எண்ணிக்கையானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயிரிழந்த பிரதேச சபைத் தலைவரின் உடலுக்கு கடந்த சனிக்கிழமை தனது இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக மதுரங்குளி வந்திருந்தார்.
Share:

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag