Comments

3/recent-comments

Thursday, May 6, 2021

கர்ப்பிணி தாய் ஒருவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பு


தனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்காக காத்திருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி கோவிட் நியுமோனியா நிலையில் உயிரிழந்துள்ளார். ராகமை நாரங்கொடபாலுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தாய் ராகமை வைத்தியசாலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூன்று மாத கர்ப்பிணியான 45 வயதுடைய இத்தாய் சுகயீனமான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார். இதன் போது அத்தாய்க்கு சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும் மீண்டும் சுகயீனமுற்றதால் மீண்டும் ராகமை வைத்தியசாலைக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது அத்தாய்க்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போது அத்தாய் கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அத்தாய் மினுவங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு அங்கு அவளது நிலை மோசமடைந்ததால் மீண்டும் ராகமை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இத்தாய் ராகமை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

Share:

Sunday, September 1, 2013

புத்தளத்தில் இன்று ஐ.ம.சு.முன்னணியின் இரண்டாவது தேர்தல் பிரசாரக் கூட்டம்

நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக் கூட்டம் ஒன்று புத்தளத்தில் இடம்பெறவுள்ளது. இன்று இரவு 7 மணி முதல் இக்கூட்டம் புத்தளம் வெட்டுக்குளம் சந்தியில் இடம்பெறும்.
Share:

கடல் அலையில் சிக்சி இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

இரண்டரை வயது குழந்தை ஒன்று கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக மாராவில பொலிசார் தெரிவித்தனர்.   மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருசுப்பள்ளிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

14 வயது சிறுவன் மீது பாலியல் வல்லுறவு. சந்தேக நபரைக் கைது செய்ய நடவடிக்கை

புறா பிடித்துத் தருவதாகக் கூறி சிறுவன் ஒரவனை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் நபர் ஒருவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக வண்ணாத்திவில்லு பொலிசார் தெரிவித்தனர்.  வண்ணாத்திவில்லு 16ம் கட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவனாகும்.
Share:

12 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய 62 வயது தாத்தா கைது

இரண்டு வருடங்களாக பாடசாலை மாணவியான சிறுமி ஒருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகச் சொல்லப்படும் 62 வயது நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிசார் தெரிவித்தனர்.  12 வயதுடைய சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமியாவார். 
Share:

தேர்தல் சட்டத்தை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டவர் முந்தல் பொலிசாரால் கைது

சட்டவிரோதான முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஒருவர் முந்தல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இதற்குப் பயன்படுத்திய வானும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தேர்தல் சட்டதிட்டங்களுக்கு அமைய குறித்த வேட்பாளரின்றி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்த்தை மீறியதற்காகவே இக்கைது இடம்பெற்றுள்ளது.
Share:

Friday, May 24, 2013

Ven Purave... Tamil Peace Song

Share:

Wednesday, May 22, 2013

TV நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சியில் கலந்கொண்ட தாய் ஒருவரின் மார்பில் பால் குடித்த நிகழ்ச்சி தொகுப்பாளர்!

நெதர்லாந்தின் டச்சு தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் சனிக்கிழமை இரவு நடாத்திய ரி.வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தாய் ஒருவரின் மார்பில் இருந்து பாலை உறிஞ்சியதைப் பார்த்து பார்வையாளர்கள் திகைப்படைந்தனர்.
Share:

Tuesday, May 21, 2013

காலான் உண்ட பின் நிர்வாணமாக வீதியில் வலம் வந்த மாணவி பொலிசாரால் மடக்கி பிடிப்பு!

காலான் உண்டதால் நிர்வாணமாக வீதியில் ஊர்வலம் கிளம்பிய மாணவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் Colorado மாகாணத்தின் University of Colorado பல்கலைக்கழகத்தை சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர், திடீரென பல்கலைக்கழக வகுப்பில் வைத்து தனது ஆடைகளை களைந்து நிர்வாணமானார்.
Share:

சவூதி - குற்றவாளிகள் ஐவருக்கு மரண தண்டனை வழங்கி அவர்களின் உடல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

சவூதி அரேபியாவில் இன்று யேமன் நாட்டுக் குற்றவாளிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டு, உடல்கள் பொது இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட இவர்கள் ஐவரும், ஒரு குழுவாக குற்றங்களைச் செய்து வந்ததாகவும், சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Share:

இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பமானதையடுத்து பரபரப்பு!

பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share:

Sunday, May 19, 2013

ஐ.தே.கட்சி எம்.பி ஹரிசன் ஆனமடுவில் மாட்டு வண்டியில் சென்று அங்கத்தவர்கள் சேர்ப்பு. (படங்கள் இணைப்பு)


ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆனமடு பிரதேசத்தில் மாட்டு வண்டியிலும், துவிச்சக்கர வண்டியிலும் பயணித்து கட்சிக்கு புதிய அங்கத்தவர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.
Share:

மதுரங்குளியில் கட்சி அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வில் ரணில்! (படங்கள் இணைப்பு)

ஐ.தே.கட்சிக்கு நாடு முழுவதும் 20 இலட்சம் போ்களை சோ்த்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் முந்தல், மதுரங்குளி மற்றும் புத்தளம் பிரதேசங்களில் கட்சிக்கு அங்கத்தவர்களைச் சேர்க்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
Share:

புகையிரதம் நிறுத்த முன் அதிலிருந்து இறங்க முற்பட்டவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்துள்ள புகையிரதத்தில் பயணித்துள்ள பயணி ஒருவர் புகையிரம்  புகையிரத நிலையத்தில் நிறுத்த முன் அதிலிருந்து இறங்க முற்பட்ட வேளையில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாராவில பொலிசார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நாத்தாண்டி புகையிரத நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Share:

உள்ளுர் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் இருவர் சிலாபம் பொலிசாரால் கைது!

தங்கொட்டுவ நகரில் நேற்று சனிக்கிழமை சிலாபம் பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத குற்றங்களின் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றின் போது கல்கடாஸ் வகை உள்ளுர் தயாரிப்பிலான  துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் மோட்டார் பைசிகளில் பயணித்த இருவரை கைது செய்துள்ளனர்.
Share:

Friday, May 17, 2013

யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!. கருவலகஸ்வெவவில் சம்பவம்!!

கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட  புளியங்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Share:

ஒரு வயது குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!

மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளய்ங்கார எனும் பிரதேசத்தில் தாய் வீட்டிலில்லாத சமயம் கைக்குழந்தையொன்று தீயில் அகப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஒரு வயதும் 3 மாதங்களுமான ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாதம் பொலிசார் தெரிவித்தனர்.
Share:

Thursday, May 16, 2013

யாழ் ஹோட்டலில் விபச்சார முற்றுகையிட்ட விவகாரம். பிரதேச செயலாளரைக் கைது செய்ய நடவடிக்கையாம்.

யாழ். பிரதேச செயலரை விரைவில் கைதுசெய்யவுள்ளதாக யாழ்.தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
யாழ். மணிக்கூட்டு கோபுர திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் ஊடகவியலாளர்களுடன் சிறிது நேரம் உரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.
Share:

தன் பாடசாலை மாணவச் சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அதிபருக்கு விளக்கமறியல்!

கெகிராவ, கல்கிரியாகம பாடசாலையொன்றின் அதிபர் ஒருவருக்கு வயது குறைந்த சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றம் மீதான விசாரணை நிமித்தம் எதிர்வரும் 22ம் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Share:

ஒரே மேடையில் இரு பெண்களை மணந்த சவூதியர். மக்காவில் சம்பவம்

ஒரே மேடையில் இரு பெண்களை மணந்து இல்லற வாழ்க்கையை ஆரம்பித்த சவதி பிரஜையொருவரின் விருந்தோம்பல் சவுதி ஊடகங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Share:

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag